Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காற்றாலை மின் உற்பத்தி 503 மெகாவாட்டாகச் சரிவு! தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுமா?

காற்றாலை

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துவிட்டது. 5,000 மெகாவாட் வரை உற்பத்தியாகி வந்த காற்றாலை மின்சாரம் திடீரென 500 மெகாவாட்டாக சரிவடைந்தது. 

தமிழகத்தின் மொத்த மின் தேவை 12,500 மெகாவாட். இதைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழகத்தில் அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், சூரிய மின் சக்தி, காற்றாலை, அணு மின் சக்தி ஆகியவற்றின் மூலமாகச் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்த மின் திட்டங்கள் முழுமையாகச் செயல்பட்டால் 19,259 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். 

தமிழகத்தின் எந்த மின் திட்டமும் 100 சதவிகித செயல்பாட்டில் இருக்கவில்லை. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் காற்றின் வேகம் காரணமாகக் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக இருக்கும். தமிழகத்தில் சுமார் 10,000 காற்றாலைகள் உள்ளன. அவை முழுமையாகச் செயல்பட்டால், 7,598 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தியானது அதிகபட்சமாக 5,100 மெகாவாட் அளவை எட்டியது. 

காற்றாலை

தற்போது தென் மேற்குப் பருவமழை குறையத் தொடங்கியதால் காற்றின் வேகமும் குறைந்துவிட்டது. பருவக் காற்று குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், காற்றாலை மின் உற்பத்தி வெறும் 503 மெகாவாட் என்கிற நிலையை அடைந்தது. இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும் நிலைமை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி, அனல் மின் நிலையங்கள் மூலமாக 2,999 மெகாவாட், நீர் மின் நிலையங்கள் மூலமாக 361 மெகாவாட், சோலார் மின் திட்டம் மூலம் 323 மெகாவாட், காற்றாலை மின் திட்டத்தில் 503 மெகாவாட், கூடங்குளம் அணு சக்தி மூலமாக 562 மெகாவாட் உற்பத்தியாகிறது.இதில் ஏற்படும் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் வெளி மாநிலங்களிலிருந்தும் மத்தியத் தொகுப்பில் இருந்தும் தமிழக மின்வாரியம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் நிலைமை உருவாகி இருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement