விநாயகர் சதுர்த்தி பந்தலில் இஸ்லாமியர்கள் தொழுகை - நல்லிணக்கத்தின் அடையாளம்

ந்தியாவில் பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் விநாயகர் சதுர்த்தியும் பக்ரீத் பண்டிகையும் அடுத்தடுத்து வந்தன. மதக்கலவரத்துக்குப் பெயர்போன மும்பையில் இந்தச் சமயத்தில் பல நல்லிணக்க விஷயங்களைக் காண முடியும்.

விநாயகரை வழிபடும் இஸ்லாமிய மக்கள்

மும்பையைப் பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை. விநாயகர் இல்லாத வீதியே இருக்காது. விநாயகர் சதுர்த்தி பந்தலில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் ஒன்றை மும்பை போலீஸ் ட்வீட் செய்துள்ளது. கஃபே பரேடு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது எனறும் 'மும்பையின் பலம் இதுதான்' என்றும் மும்பை போலீஸ் ட்வீட்டில் கூறியுள்ளது. 

மும்பை போலீஸ் பகிர்ந்த பண்டிகை கால புகைப்படம்

சூரத்தில் நடந்த மற்றொரு சம்பவமும் மக்களை நெகிழ வைத்தது. அங்குள்ள மசூதி அருகே விநாயகருக்கு சிலை வைக்கப்பட்டு இந்து மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். எந்தச் சண்டையும் சச்சரவும் ஏற்படவில்லை. ஏராளமான இஸ்லாமிய பெண்களும் விநாயகருக்கு நடந்த தினசரி வழிபாட்டில் பங்கேற்றனர். இந்தப் பகுதியில் மசூதி அருகே, விநாயகருக்கு நிலை அமைக்கப்பட்டதும் இதுவே முதன்முறை. 

பண்டிகை காலத்தில் இந்தியர்கள் கண்ட ஒற்றுமை

இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல உத்ரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்ரீத் தினத்தன்று அங்குள்ள காந்தி மைதானத்தில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மழை காரணமாக இஸ்லாமிய மக்களால் தொழுகை நடந்த முடியாத நிலை. சீக்கிய மக்கள் தங்கள் குருத்வாராவை திறந்து, இஸ்லாமிய மக்கள் ஈத் தொழுகையில் ஈடுபடக் கேட்டுக்கொண்டனர்.  குருத்வாராவில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்ட புகைப்படத்தை லூதியானாவைச் சேர்ந்த ஒருவர் ட்வீட் செய்ய வைரலாகியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!