Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மாநில அரசு என்ற ஒன்று காணாமல் போய்விடும்!' - எச்சரிக்கும் மருத்துவர் ஷாலினி

நீட் எதிர்ப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. 'மத்திய அரசால் தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தின் நிலை இந்தியாவின் பன்முக அரசியலமைப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது” என வேதனை தெரிவிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி. 

அரியலூர், அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதையும் போராட்டக்களத்துக்குக் கொண்டுவந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக இந்திய அளவில் எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. முன்னதாக நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, 'மத்திய அரசின் பொய் டாக்டர் ஷாலினிவாக்குறுதியால்தான் அனிதா இறந்தார்' என்று பல தரப்பினரும் நீட் தேர்வுக்கு எதிராகக் குற்றம் சாட்டிவருகின்றன. இந்நிலையில், “நீட் மட்டுமல்லாது தொடர்ந்து பல விஷயங்களிலும் தமிழகத்தின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன” எனக் கூறுகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பத்தாம் வகுப்பு வரையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ்ப் படித்து வந்த நான், பதினோறாம் வகுப்புக்காக மாநிலப் பாடத்திட்டக் கல்வியில் சேர்க்கப்பட்டேன். அப்போதெல்லாம் தொழில்முறைக் கல்வியில் சேர ஸ்டேட் போர்டு வழிக் கல்விமுறையே சிறப்பானதாகவும் எளிதானதாகவும் இருந்தது. ஆனால் இன்று? ஒரு மாநிலத்தின் அத்தனை உரிமைகளும் பறிக்கப்படுவதை இந்த அரசியல்வாதிகள் வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர். 

இதேபோல், இந்த நிலை தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருக்குமேயானால், ஒருநாள் இந்த நாட்டில் மாநில அரசு என்ற ஒன்று இல்லாமல் ஒட்டுமொத்தமாகவே மத்திய அரசு என்ற ஒரே அரசுதான் நீடிக்கும். இது நமது பன்முக அரசியலமைப்பு முறைக்கு முற்றிலும் எதிரானது. இந்தியா என்பது உண்மையில் ‘ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியம்’ ஆகும். பிரிட்டிஷாரால் நாம் ஒன்றிணைக்கப்படும் முன்னர் தமிழர்களாகிய நாம் தனி ஒரு தேசியமாகத்தான் இருந்தோம். சுய ஆட்சி தரப்படும் என்ற வாக்குறுதியால் மட்டுமே இந்திய ஒன்றியத்தில் நாம் இணைய ஒப்புக்கொண்டோம்.

ஆனால், தற்போது நமது அதிகாரங்கள் பிடுங்கப்படுவது துரோகத்தின் உச்சம் ஆகும். கல்வியும் மருத்துவமும் சேவைத் துறையில் இருந்து எப்போது தொழில் துறைக்கு மாறியதோ அப்போதே ஓர் அரசு வீழ்ந்துவிட்டது. அரசியலமைப்பின்படி உள்ளாட்சிகளுக்கு அதிக உரிமைகள் கொடுத்தே அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், மத்திய அரசின் செயலால் அரசியலமைப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது” என்கிறார் கொதிப்புடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement