Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி, கமல் அரசியலுக்கு வரவே முடியாது! - வசந்தகுமார் தடாலடி

ரஜினி, கமல் அரசியலுக்கு வரவே முடியாது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார். 


நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து, கொள்ளிடம் வரை 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக பண்ருட்டி வந்த அவர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அந்தச் சிலையின் அருகிலிருந்த கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதைக் கண்ட அவர், தனது ஆதரவாளர்களுடன் அதைச் சரிசெய்தார். இந்தப் பணியின்போது அவரது செருப்பு அறுந்து போகவே, அருகில் இருந்த கடைக்காரரிடம் கொடுத்து தைத்து வாங்கினார். இச்செயல் தொகுதி எம்.எல்.ஏ-வுக்கும், அ.தி.மு.க.காரர்களுக்கும் சற்று எரிச்சலை உண்டாக்கியது. காலை அமுக்கிவிடச் சொல்லும் எம்.எல்.ஏ-க்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்தியாசமாக இருக்கிறாரே என்றார்கள் அங்கிருந்த பொதுமக்கள். அதேபோன்று, சிதம்பரம் - சீர்காழி செல்லும் சாலையில் கடவாச்சேரி பாலத்தில் லாரி ஒன்று பழுதாகி நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக காரைவிட்டு இறங்கி தனது ஆதரவாளர்களுடன் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். 

கடலூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ’நீட் தேர்வு இப்போதைக்கு வேண்டாம். இன்னும் பத்து வருடம் கழித்து கொண்டுவரலாம். அதற்குள் மாணவர்கள் அதை எதிர்கொள்ளும் தகுதிக்கு வந்துவிடுவார்கள். உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17-க்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க. அரசால் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது. ஏனென்றால், ஒரு வார்டில் கூட அவர்களால் ஜெயிக்க முடியாது என்பதுதான். ரஜினி, கமல் இருவரும் சினிமாவைத் தவிர அரசியலுக்கு வரவே முடியாது. கீழ்மட்ட அரசியலும், கீழ்மட்ட மக்களின் மனநிலையும் துளிகூட அவர்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட அவர்கள் எப்படி அரசியலுக்கு வரமுடியும்?’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement