Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சி.வி.சண்முகத்தின் உதவியாளருக்கு மா.செ பதவி! - திணறடித்த தினகரன்

அ.தி.மு.க-வின் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை நீக்கியிருப்பதாக அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாகவும், அதன் பின் மூன்று அணிகளாகவும் பிரிந்தது. திகார் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டிவி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் தனியாகச் செயல்பட ஆரம்பித்தார். கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக நீக்கி, அந்தப் பதவிகளைத் தனது ஆதரவாளர்களுக்கு வழங்கி வருகிறார். அதன்படி விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, விழுப்புரம் மாவட்ட முன்னாள் அம்மா பேரவை செயலாளர் ஆ.ஏ.பாலசுந்தரத்தை அந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறார்.

தினகரன்

யார் இந்த பாலசுந்தரம்?:

 

பாலசுந்தரம்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் பி.எஸ்ஸி படித்தவர். கடந்த 1989-ம் ஆண்டில் கட்சியில் இணைந்த இவர், 1992 காலகட்டத்தில் திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக் கலைக்கல்லூரியில் சேர்மனாகப் பதவி வகித்தவர். கடந்த 2001-ம் ஆண்டில் சி.வி.சண்முகம் மாவட்டச் செயலாளராக ஆனதும், 2002-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக இவர் அறிவிக்கப்பட்டார். அதிலிருந்து அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பி.ஏ-வாக இருந்தார். வலதுகரமாக இருந்தார் என்று சொல்வதைவிட ஆக்டிங் அமைச்சர் என்று சொல்லும் அளவுக்கு வலம் வந்தவர். 2011-ம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்தபோது சி.வி.சண்முகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகினார். 2012-ல் இவர் வகித்த அம்மா பேரவைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால் கட்சியில் மட்டும் செயல்பட்டு வந்தார். டி.டி.வி.தினகரன் தனியாகச் செயல்படத் தொடங்கியதும், தனது ஆதரவாளர்களுடன் சென்னை சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இந்தநிலையில், பாலசுந்தரத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை டி.டி.வி.தினகரன் அளித்துள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement