Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

மாணவி அனிதாவுக்காக நீதிகேட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். நீட் தேர்வு முறையால் மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா.

neet anitha
 

அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தற்போது வகுப்பைப் புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்கள் பேசுகையில் ”ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நாளையும் இப்போராட்டமானது தொடரும். எங்களைப் போல் மற்ற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தைத் தொடர வேண்டும்” என்று கூறினார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement