Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``மகன் பிறந்து என் வாழ்க்கையை மாற்றிவிட்டான்!''- மனம் திறக்கும்  ஊர்வசி

ந்த கேரக்டரிலும் பிச்சு உதறும் ஊர்வசி, மறுஜென்மம் எடுத்துள்ளார். மகன் பிறப்பை ரகசியமாக வைத்திருந்த ஊர்வசி, இப்போது மனம் திறந்திருக்கிறார். ``மகன் பிறந்தது, தன் வாழ்க்கையையே மாற்றிவிட்டது'' என்கிறார்.  `என்ன... இந்த வயதில் ஊர்வசி, குழந்தை பெற்றிருக்கிறாரா?'! என ஆச்சர்யப்பட வேண்டாம். அனைத்தும் உண்மைதான்!

மகன், கணவருடன் நடிகை ஊர்வசி

`முந்தானை முடிச்சு' படம் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனிப் பாதை வகுத்துக்கொண்டு வலம் வந்த ஊர்வசி, சமீப காலங்களில் பொது இடத்தில் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவந்தார். அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அவருக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவரைக்  கடுமையாகப் பேச, அவர் மனித உரிமை ஆணையம் வரை சென்று புகார் அளித்தார். நடிகை ஊர்வசி, ஆண்களைத் தரக் குறைவாகத் திட்டுவதாகப் புகாரில் கூறப்பட்டது. மனித உரிமை ஆணையம்,  அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. `சொந்த வாழ்க்கையில் அவர் மட்டும்  ஒழுக்கமா... எப்போது பார்த்தாலும்  போதையில் இருப்பவர்தானே' என்று விமர்சனம் எழுந்து அடங்கியது.

சொந்த வாழ்க்கையிலும் ஊர்வசிக்குப் பிரச்னைதான். தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது 2000-ம் ஆண்டு, மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை அவர்  திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. எட்டு ஆண்டுகள்தான் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக 2008-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

மகள் குஞ்சட்டாவை தன்னுடன் வைத்துக்கொள்ள அனுமதிக்குமாறு, எர்ணாகுளம் நீதிமன்றத்தை ஊர்வசி நாடினார். விசாரணையில், `ஊர்வசி எப்போதும் மது போதையில் இருப்பவர். அவரை நம்பி மகளை எப்படி ஒப்படைப்பது?' என கணவர் மனோஜ் கே.ஜெயன் குற்றம் சாட்டினார். முடிவில், தந்தையுடனேயே சென்றார் மகள் குஞ்சட்டா. 

இடையில், சகோதரியும் நடிகையுமான கல்பனாவின் இறப்பு, ஊர்வசியை வெகுவாக பாதித்தது. ஊர்வசி, கடந்த இரு ஆண்டுகளாகப் பெரிய திரையில் தலைகாட்டவில்லை. `என்ன ஆனார்?' என்று எவரும் யோசித்தும் பார்க்கவில்லை. கணவர், மகளைப் பிரிந்த பிறகு அமைதியாக இருந்த ஊர்வசி, தற்போது மனக் காயங்களிலிருந்து மீண்டு, மறுமணம் புரிந்து சந்தோஷமாக வாழத் தொடங்கியிருக்கிறார். இதற்கு ஆதாரமாக இரண்டு வயது மகன் ஊர்வசிக்கு இருக்கிறான்.

ஊர்வசியின் கணவர் சிவபிரசாத், சென்னையைச் சேர்தவர். மகன் பெயர் இஷான். இவர்தான் ஊர்வசியின் தற்போதைய உலகம். ``மகன் பிறந்த பிறகு என் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. அவனோட அழகான முகம், என்னை அப்படியே மாற்றிவிட்டது. எப்போதுமில்லாத அளவுக்கு இப்போது சந்தோஷமாக இருக்கேன். அதிக குழந்தைங்க பெத்துக்கணும்னு எனக்கு ஆசை. அதனால்தான் இந்த வயசுலயும் ஒரு மகனுக்குத் தாயாகியிருக்கேன்.

இப்பெல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அனுபவித்து வாழ்கிறேன். அவனைப் பிரிஞ்சு என்னால ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. எங்கே ஷூட்டிங் இருந்தாலும் அவனோடுதான் போறேன். ஆரம்பத்துல, குஞ்சட்டாகூட இப்படித்தான் என்கூடவே இருப்பாள். இப்போ அவ இடத்துல இவன் இருக்கிறான். அவளுக்கும் தம்பியை ரொம்பப் பிடிக்கும். இஷான்னு பெயர் வெச்சதே அவள்தான். கல்பனா மகள் ஸ்ரீமயி, குஞ்சட்டா  இவங்க ரெண்டு பேருதான் இஷானுக்கு திக் ஃப்ரெண்ட்ஸ்'' என்கிறார் ஊர்வசி.

photo courtesy: vanitha

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement