Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நாங்கள் யாருக்காகப் போராடுகிறோமோ அவர்கள் எங்களைத் திரும்பிகூட பார்க்கவில்லை!’ - உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள்

திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் காலவரையற்ற உண்ணாவிரதப் போரட்டத்தைத் நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஐந்து பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் எண்ணிக்கை நேற்று இரவு 63-ஐ தொட்டது. நேற்று கொட்டும் மழையிலும்கூட அவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை.

neet anitha protest

உண்ணாவிரதத்தின் ஒருங்கிணைப்பாளர் தினேஷிடம் பேசினோம். அவர் கூறியதாவது, "நாங்கள் நேற்று
9 மணியிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். முதலில் ஐந்து பேருடன்தான் ஆரம்பித்தோம். நேற்று இரவோடு அறுபத்து மூன்று பேர் இருந்தோம். நேற்று எங்களைப் பற்றி வந்த செய்திகளைக் கண்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்துள்ளனர். இப்பொழுது 120 பேர் இருக்கிறோம். இன்று காலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் சென்று உண்ணாவிரதத்துக்கான அழைப்பை விடுத்தோம். ஆனால், அவர்களோ உங்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டால் கல்லூரி நிர்வாகம் எங்களது மதிப்பெண்ணில் கை வைத்துவிடுவார்கள் என்று சொல்லி நழுவிவிட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மாணவர்களும் பல்வேறு துறைகளில் இருந்து இவர்களுக்காக வந்திருக்கிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட இவர்களோ எங்களுடன் இணைய மறுத்துவிட்டனர். எப்பொழுதும் போராடுபவர்கள்தான் போராடுகிறார்கள். மற்றபடி யாரும் வருவதில்லை.

நாளை, மாணவர்கள் அதிகம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அனிதாவைப்போல் இனி ஒரு மாணவ மாணவியும் பாதிக்கப்படக் கூடாது. அனிதா மரணத்துக்கு நீதி கேட்பது மட்டுமல்லாமல் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்காகவாவது மாணவர்கள் போராட வர வேண்டும்.

neet protest
 

நேற்று ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினோம். இன்று புதியதாக முகேஷ் என்பவர் இணைந்துள்ளார். மொத்தம், ஆறு பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். நாளை மாலை கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம்.

"COME FORWARD MEDICAL STUDENTS" என்ற வாசகத்தையும் நாளை முன்னிறுத்த உள்ளோம்.  நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அனிதாவின் தற்கொலைக்கு விசாரணைக்குழு அமைக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கல்வியை மத்திய அரசின் பட்டியலிலிருந்து, மாநில அரசுக்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டுவதை நிறுத்திவிட்டு இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் போராட ஆரம்பித்தோம். ஆனால், இப்பொழுது மாணவர்களும் குறிப்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்களும், இதர மாணவர்களும் பொதுமக்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட மிகத் தாழ்மையுடன் வேண்டுகோளாக வைக்கிறேன். அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்பது உட்பட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். ஒருநாளும் நிறுத்த முடியாது’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement