Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!

சிவகங்கையில் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு மன்னர் துரைசிங்கம் கல்லூரி மாணவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னர் துரை சிங்கம் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும், அனிதா மரணத்திற்கு நீதி வேண்டியும்  பேரணி நடத்தினார்கள். இந்தப் பேரணியானது மதுரை முக்கு வழியாக ஆரம்பித்து, அரசு ஊழியர்கள் சங்கம், சிவன்கோயில், வேலுநாச்சியார் அரண்மனை வாசல் முன்பு மறியலோடு முடிவடைந்தது. 
மறியலின் போது பேசிய இந்திய மாணவர் சங்கத்தின்  நிர்வாகிகள்,’ 1,176 மதிப்பெண் எடுத்தும் மத்திய அரசின் நீட் தேர்வு என்கிற மத்திய அரசின் சூழ்ச்சியால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் அனிதா. இவரைப் போன்ற அனிதாக்கள் தமிழகத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள். தமிழகக் கல்வி முறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது. மாநில அரசுக்கென்று இருக்கக் கூடிய கல்வி உரிமையில் மத்திய அரசு மூக்கை நுழைக்கக் கூடாது. மாநில சுயாட்சி மத்திய அரசால் பறிபோய் கொண்டிருக்கிறது. 

கேரள முதல்வர் அனிதா போன்ற மாணவிக்குத் தமிழகத்தில் சீட் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், தமிழக முதல்வராலோ அனிதா போன்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலையாக உள்ளது. ஆகையால் நீட் தேர்வு முறையை மத்திய, மாநில அரசுகள் நிரந்தரமாக நீக்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசால் முடக்கப்பட்ட அரசாக இருப்பதால்தான் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement