Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திட்டமிட்டபடி தொடர் வேலைநிறுத்தம்!.. ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவிப்பு

இரண்டு நாள்களுக்குள் அரசிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை என்றால் செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

ஜாக்டோ-ஜியோ போராட்டம் (கோப்புப்படம்)


எட்டாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, பழைய ஓய்வூதிய முறையையே தொடர வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. போராட்டத்தை அடுத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரை அழைத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 


அப்போது, ஊதியக்குழுவின் பரிந்துரைகள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பெறப்பட்டு, அதனை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அரசு தரப்பில் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், ’ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல், இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பான சாதகமான முடிவுகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்வது எனத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக செப்டம்பர் 6-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இந்தச் சாதகமான பதில்கள் அடுத்த இரண்டு நாள்களுக்குள் கிடைக்காவிட்டால் திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement