Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவோதயா பள்ளி விவகாரம்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் கூடுதல் அவகாசம்

நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதிப்பது குறித்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

 

குமரி மகா சபையின் செயலர் ஜெயக்குமார் தாமஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'கல்விக்காக, தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவுசெய்ய வேண்டியதுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும். இதனால், ஜவஹர் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும். இந்தப் பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இவ்வகைப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசு போதிய இடங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு, இந்தப் பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு முன்பாகக் கடந்த 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் பதிலை செப்டம்பர் 4-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பு குறித்து தமிழக அரசின் கருத்தை செப்டம்பர் 11-ம் தேதிக்குள் தெரிவிக்க உத்தரவிட்டு, அன்றைய தினமே வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement