Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம் நடத்திய திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் 52 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஊர்வலம் போகும் சட்டக் கல்லூரி மாணவர்கள்

திருச்சி காந்தி மார்க்கெட்டில், சுமைதூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா, 12-ம் வகுப்பில்1,176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பைத் தவறவிட்டார். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அவர், மருத்துவ சீட்டு கிடைக்காத மன வருத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இது மரணம் அல்ல, மத்திய மாநில அரசின் படுகொலை. இந்தப் படுகொலைக்கு நீதி வேண்டும். நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என்ற முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ''நீட் தேர்வு என்பது தமிழக மக்களின் மருத்துவக் கனவைப் பறிக்க நினைக்கும் ஒரு ஆயுதம். மருத்துவக் கனவுடன் இருக்கும் வருங்கால மாணவர்கள், லட்சக் கணக்கில் செலவழித்து சி.பி.எஸ்.சி பாடத்தைப் படிக்கும் கட்டாய நிலை ஏற்படும். இன்று, நீட் தேர்வினால் அனிதா என்ற சகோதரியை நாங்கள் இழந்துவிட்டோம். மேலும், இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் இருக்க, நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். அனிதாவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் பதவி விலக வேண்டும்'' என்று கூறினர்.

கைது செய்யப்படும் சட்டக் கல்லூரி மாணவர்கள்

சட்டக் கல்லூரியின் ஆசிரியர் லதா, அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தவறு என்று மாணவர்களிடம் அறிவுரை வழங்கினார். ஆனால், மாணவர்கள் கலைந்துசெல்ல மறுத்துவிட்டனர். பிறகு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருச்சி மாவட்ட காவல் துணை ஆணையர் சத்தி கணேசன், மாணவர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படியாகக் கேட்டுக்கொண்டார். அதை ஏற்க மறுத்து, போலீஸாரின் தடையை மீறி சட்டக் கல்லூரியிலிருந்து டி.வி.எஸ் டோல்கேட் வரை ஊர்வலம் செல்ல முயன்ற 52 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளை போலீஸார் கைதுசெய்து காவல் வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement