வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (05/09/2017)

கடைசி தொடர்பு:08:07 (05/09/2017)

`நவோதயா பள்ளிகள் கிராமப்புறங்களில் தொடங்கப்படுமா?'- பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்தப் பள்ளிகள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்படுவதுகுறித்த வழக்கு, மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், இந்தப் பள்ளிகள் கிராமப்புறங்களில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை சமூக செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு முன்வைத்துள்ளார்.

நவோதயா பள்ளிகள் குறித்து பிரின்ஸ் கஜேந்திர பாபு சிவகங்கையில் பேசும்போது, 'நவோதயா பள்ளிகள், மாவட்டத்தில்  ஓர் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டால் அது சரியாக இருக்காது. கிராமப்புறங்களிலிருந்து அந்தப் பள்ளி தொடங்கப்பட வேண்டும். அப்போதுதான் தரமான கல்வி என்பதும், நாடு முழுவதும் ஒரே கல்வி என்பதும் சாத்தியமாக இருக்கும். நீங்கள், மாவட்டத்தில் ஒரு பள்ளியை ஆரம்பித்துவிட்டு நவோதயா பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகிறது, தரமான கல்வி கொடுக்கிறோம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளிக்கான வாட்ச்மேன் வரைக்கும் நியமிக்கப்படும்போதுதான், தரமான கல்வி கிடைக்கும். சி.பி.எஸ்.சி கல்வி முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதில் மாற்றம் கொண்டுவந்து பத்தாண்டுகள் ஆகி விட்டன. இந்த மாற்றத்துக்கும் நீட் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை. எப்படி இருந்தாலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஆகையால், பாதிப்புகள் எதுவும் வராது. எனவே, மத்திய அரசு நவோதயா பள்ளிகளை கிராமத்திலிருந்து தொடங்க வேண்டும். அப்படி மத்திய அரசு ஆரம்பித்தால் வரவேற்கலாம். ஆனால், அப்படி ஆரம்பிக்க மாட்டார்கள்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க