பாலபாரதி கூறுவது உண்மைதான்..! கிருஷ்ணசாமிக்கு சாட்டையடி கொடுத்த ஜவாஹிருல்லா

''கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறியது முற்றிலும் உண்மை'' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், அனிதாவின் தற்கொலைகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். அவருடைய கருத்துக்கு, தமிழகம் முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பிவருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, 'கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்குப் போதிய மதிப்பெண் எடுக்காததால், ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும் ஜெயலலிதா உதவிசெய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார். இந்தத் தகவல், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக, நான் பாலபாரதியை சட்டமன்றத்தில் பார்த்ததே இல்லை' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம்குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறுவது முற்றிலும் உண்மை. கிருஷ்ணசாமிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த நான் சாட்சி. 14-வது சட்டமன்றத்தில் கிருஷ்ணசாமிக்கு 6-வது இருக்கையில் அமர்ந்திருந்தவர் பாலபாரதி. காவி கண்ணாடிக்காரருக்கு உழைக்கும் மக்களின் பிரதிநிதி கண்ணுக்குத் தெரிய மாட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!