Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்: விநாடிக்கு 700 கன அடி நீர் திறப்பு!

தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியைத் தாண்டியுள்ளது.

மேட்டூர் அணை

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகளிலிருந்து அதிக அளவு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், வறட்சியின் காரணமாகக் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகப் பெய்த மழையாலும், தீவிரமடைந்துவரும் தென்மேற்குப் பருவமழையாலும் கர்நாடகா பகுதி அணைகளில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. இதையடுத்து, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது. 

தற்போது, 10 மாதங்களுக்குப் பின்னர் 60 அடி நீர்மட்டத்தைத் தாண்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து, விநாடிக்கு 21,973 கன அடியிலிருந்து 17,945 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் வறட்சி மறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.38 அடியாக உள்ளது. மேலும், நீர் இருப்பு 29.67 டி.எம்.சி மற்றும் நீர்த் திறப்பு, விநாடிக்கு 700 கன அடியாக உள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement