Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழகத்துக்குக் கூடுதலாக 2,600 எம்.பி.பி.எஸ் சீட்' : டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை!

ரவிந்திரநாத்

''தமிழகத்துக்கு, இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டாலும், இன்னும் கூடுதலாக 2,600 இடங்களை மத்திய அரசு ஒதுக்கீடுசெய்து, அதை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப வேண்டும். தமிழகத்திற்கு நிரந்தரமாக நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்று டாக்டர் ரவீந்திரநாத் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க மத்திய அரசு அவசரச் சட்டத்தை உடனடியாகக்  கொண்டுவர வேண்டும். இந்த ஆண்டு, தமிழகத்திற்குக்  கூடுதலாக 2,600 எம்.பி்.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். தமிழக அரசின் ஒதுக்கீட்டு இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு, நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வழங்கிட வேண்டும்.


கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். தமிழக அரசின் ஒதுக்கீட்டு இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களைத் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே வழங்கிட, அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். தொலைதூரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடுசெய்திடவும், அவர்களுக்குக் கூடுதலாக 30 விழுக்காடு வரை மதிப்பெண் வழங்கிடவும், இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் மருத்துவ இடங்களில், 50 விழுக்காட்டை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ இடங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்துக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கல்விக் கட்டணத்தை மத்திய - மாநில அரசுகளே செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு, கல்விக் கடன்களை வட்டி இன்றி, நிபந்தனைகள் இன்றி உடனுக்குடன் வழங்கிட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள், நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கக் கூடாது. இந்தக் கோரிக்கைகளை உடனே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement