Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிருஷ்ணசாமி மகளுக்கு மெடிக்கல் சீட் : சட்டசபையில் அன்று நடந்தது என்ன?

நீட் தேர்வுக்கு ஆதரவாகப் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி, கருத்துக் கூறி வரும் வேளையில், மார்க்ஸிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, வெளியிட்ட பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணசாமியின் மகள் குறைந்த மதிப்பெண்  எடுத்திருந்த நிலையில், ஜெயலலிதாவின் தயவால் மருத்துவம் படிக்க சீட் பெற்றதாக பாலபாரதி தன் பதிவில் குற்றம் சாட்டியிருந்தார். பாலபாரதியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை கிருஷ்ணசாமி நேரடியாகப் பதில் சொல்லவில்லை. 

கிருஷ்ணசாமி மகளுக்கு மெடிக்கல் சீட்

மாறாக பாலபாரதியைச் சட்டசபையில் பார்த்ததே இல்லை என்று பொத்தாம் பொதுவாகப் பதிலளித்திருக்கிறார். பாலபாரதி கூறியது உண்மையா இல்லையா என்பதைப் பற்றி இப்போது ஆராய வேண்டியதில்லை. கிருஷ்ணசாமி மகளுக்கு சீட் கொடுக்கப்பட்டது குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக பிரபல ஆங்கிலப் பத்திரிகை 2014-ம் ஆண்டு ஜூலை
23-ம் தேதியில் செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள சட்டசபை  செய்தியில் கூறியிருப்பதாவது, ''புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ பேசுகையில், ''தமிழ்நாட்டில் ஒரு பல்கலையில்கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் துணை வேந்தராக நியமிக்கப்படவில்லை. தமிழ்நாடு தேர்வாணயத்திலும் தலித் ஒருவர்கூட உறுப்பினராக இல்லை. தலித் மக்களின் வளர்ச்சியில் தமிழக அரசு அக்கறை கொள்ளவில்லை'' எனக் குற்றம்சாட்டினார். 

கிருஷ்ணசாமிக்குப் பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், ''தகுதியின் அடிப்படையில் ஆய்வுக்குழுதான் தகுதி வாய்ந்த நபர்களைத் துணைவேந்தர் பதவியில் அமர்த்துகிறது. துணைவேந்தர் பதவியில் ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. தலித் சாதியில் தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால், அவர்களைத் தேர்வு செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை'' எனக் கூறினார். 

இந்த சமயத்தில் குறுக்கிட்ட அப்போதையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வர், ''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மகளுக்குக்கூட மெடிக்கல் சீட் ஒதுக்கித் தந்தாரே'' என்றார்.

இவ்வாறு அந்த ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே, பாலபாரதி சொன்னதில் வருடம் மட்டும்தான் தவறே தவிர மற்றபடி, சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை எனத் தெரிய வந்துள்ளது. இதற்கு கிருஷ்ணசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்? 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement