Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பசு என்று நினைத்து கழுதையை ஏற்றிச் சென்றவர்கள் மீது பசுக்காவலர்கள் தாக்குதல்

ழுதையை ஏற்றிச் சென்றவர்கள் மீது பசுக்காவலர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர். 

பசுக்காவலர்கள் தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலம், ஜாலோர் மாவட்டம் சைலா நகரைச் சேர்ந்த காந்திலால் பீல், என்பவரின் கழுதை காணாமல் போயிருக்கிறது. செப்டம்பர் 2ம் தேதி கழுதையை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். கழுதையைத் தேடும் பணியில் அவர் தன் நண்பருடன் ஈடுபட்டு வந்தார். கலூதி என்ற இடத்தில் அவரின் கழுதை இருந்துள்ளது. கழுதையைக் கண்டுபிடித்தது குறித்து போலீஸுக்குத் தகவல் அளித்து விட்டு, வாகனத்தில் ஏற்றி கழுதையை வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அதற்குள், அந்தப் பகுதி பசுக்காவலர்களுக்கு யாரோ... பசுவை வாகனத்தில் கடத்திச் செல்வதாகத் தகவல் கூறியுள்ளனர்.  பசுக்காவலர்கள் கழுதையை பசு என்று நினைத்து பீலின் வாகனத்தைத் துரத்திச் சென்று மறித்துள்ளனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கூட பார்க்காமல், வாகனத்தில் இருந்தவர்களைத் தாக்கியுள்ளனர். பதறிய அவர், வாகனத்தில் கழுதைதான் இருக்கிறது என்று கத்தியுள்ளார். பசுக்காவலர்கள் உள்ளே எட்டிப்பார்க்க கழுதை இருந்துள்ளது. அவமானமடைந்த பசுக்காவலர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

தொடர்ந்து, பீல், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பசுக்காவலர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.  பசுவைக் காப்போம் என்ற பெயரில் ஆங்காங்கே பொதுமக்களைத் தாக்கும் கும்பல் உருவாகி வருகிறது. இந்தக் கும்பல்களுக்கு போலீஸ் என்றுதான் முடிவு கட்டுமோ? 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement