Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் விலக்கு குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது என்ன? தமிழிசை அடடே விளக்கம்

நீட் தேர்வு விலக்குகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன கூறினார் என்பதுகுறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நீட் தேர்வை நடத்தியது மத்திய அரசு. 'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்று தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, "மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற தமிழக அரசு முயற்சிசெய்துகொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார். இதனிடையே, தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால், நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனால், மகிழ்ச்சியடைந்த தமிழக அரசு, உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து, மத்திய உள்துறை உள்ளிட்ட மூன்று துறைகள் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தன.

மறுபுறம், நீ்ட் தேர்வுப்படி தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதே நேரத்தில், "நீட் தேர்வுப்படி மருத்துவக் கலந்தாய்வு நடத்தினால், என்னைப்போல பல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால், நீட் தேர்வுப்படி கலந்தாய்வு நடத்தக் கூடாது" என்று மாணவி அனிதா தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, நீட் தேர்வுப்படி மருத்துவக் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டது. இதனிடையே, நீட்டுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை அதிரவைத்தது.

இந்த நிலையில், நீர் தேர்வு விலக்குகுறித்து நிர்மலா சீதாராமன் என்ன கூறினார் என்பதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னைத் துறைமுகத்தில், வ.உ.சி சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலா சீதாராமனை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது சரியல்ல. தமிழகத்துக்கு ஓராண்டு விலக்குகுறித்து பரிசீலிக்கப்படும் என்றுதான் நிர்மலா சீதாராமன் கூறினார். நீட் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேட்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது" என்று கூறினார்.

மேலும், அவரிடம், தமிழக உள்ளாட்சித் தேர்லில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி வைத்துப் போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த தமிழிசை, உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்தே போட்டியிடும் என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement