Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ-க்கள்! முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

edapapdi palanisamy
 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததைத் தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் தரப்பினர் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். தற்போதைய முதல்வர் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக ஆளுநரைச் சந்தித்து தினகரன் தரப்பு மனு கொடுத்தது. எதிர்க்கட்சிகள், டெல்லி வரை சென்று தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

admm mla's


இதற்கிடையில், வரும் 12-ம் தேதி அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டம்குறித்து விவாதிப்பதற்காக, இன்று சென்னையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் உட்பட 109 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். மேலும், சிலர் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, முதல்வரின் முடிவை அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஏற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement