Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் தேர்வுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் போராட்ட அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி செப்டம்பர் 9-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

 

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா, செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவருடை இறப்பு தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பு அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டமும் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி செப்டம்பர் 9-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், 'மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு திறமையாக இருந்தாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. சமூக நீதியை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடைபெறும். அ.தி.மு.க அம்மா மாணவரனியைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள். ஜெயலலிதா இறந்த பிறகு மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பரிபோகின்றன' என்று தெரிவித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement