Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேகமாகப் பரவும் டெங்குக் காய்ச்சல்! 2-ம் வகுப்பு மாணவி பலி...


 டெங்கு  காய்ச்சலால்  இறந்த  மாணவிமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. அடுத்தடுத்து பலர் டெங்குக் காய்ச்சலுக்குப் பலியாகி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாம் வகுப்பு பயிலும் குழந்தை ஆலிஷ் எத்தில்டா, டெங்குக் காய்ச்சலுக்கு இன்று பலியாகி இருக்கிறாள். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிராண்ட்லைன் ஊராட்சி, அம்பேத்கர்  நகரில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மகள் ஆலிஷ் எத்தில்டா.  இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்புப் படித்துவந்தாள். டெங்குக் காய்ச்சல் பாதிப்பால், மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த ஆலிஷ் எத்தில்டா, அங்கு குணமாகாமல் போகவே, அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை, ஆலிஷ் எத்தில்டா பரிதாபமாக இறந்தாள்.

 

 


 டெங்குக் காய்ச்சலைத் தடுக்கும் விழிப்பு உணர்வு முகாம், பல மாவட்டங்களில் சமீபகாலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இப்படிப்பட்ட உயிர்ப்பலியும் தொடர்கதையாகிவருகிறது. குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் இதுகுறித்து கூறும்போது,  "இப்படிப்பட்ட மரணங்கள் தொடர்ந்து நிகழ ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத அரசு எந்திரங்களே இதற்கு முக்கியக் காரணம். குடிநீர் வழங்கல் துறையும் சுகாதாரத்துறையும், சமூக நலத்துறையும் ஒன்றோடொன்று தொடர்பு வைத்திருக்கவேண்டியவை. ஆறுமாதத்துக்கு ஒரு முறையாவது இந்தத் துறை அதிகாரிகள், மக்கள் நலனுக்காகக்கூடி ஆய்வுக் கூட்டம் போட்டிருக்கிறார்களா?  தேவநேயன்சத்துணவில் பல்லி விழுந்து 100 மாணவர்கள் மயக்கம் என்று செய்தி வந்த பின், அங்கேபோய் ஆய்வு நடத்துகிறார்கள். 94 குழந்தைகள் தீ விபத்தில் இறந்தபின், பள்ளிக்கூடங்களின் அமைப்புகுறித்து கவலைகொள்கிறார்கள். இதேரீதியில்தான் பள்ளி வேன், பேருந்துகளின் தரம்குறித்த ஆய்வும் இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டதால் குழந்தைகள் இறந்த சம்பவமும் நடந்திருக்கிறது. கோல்ட் ஸ்டோரேஜில் மூன்று டிகிரிக்குக் கீழேதான் ஊசி மருந்துகளை வைக்க வேண்டும், இல்லையென்றால், அது பாய்சன் என்பதை அதற்குப் பின்னால்தான்  கண்டுபிடித்தார்கள். மக்களைக் காக்கவேண்டிய முதல்கடமை அரசுக்குத்தான். பின்னரே, சமூகத்துக்கு. இன்று சமூகம்தான் அரசின் பணிகளைச் செய்து வருகிறது. அரசு, சமூகத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நிற்கிறது" என்றார், வேதனையுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement