எம்.எல்.ஏ-க்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்..! ஜெயக்குமார் ஆவேசம்

'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை ஏற்பதாக, 111 எம்.எம்.ஏ-க்கள் கையெழுத்திட்டுள்ளனர்' என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. 12-ம் தேதி அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டம்குறித்து விவாதிப்பதற்காக, இன்று சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'அ.தி.மு.க சின்னத்தில் வெற்றிபெற்ற மூன்று எம்.எல்.ஏ-க்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசுக்கு எதிராகச் செயல்படும் எம்.எல்.ஏ-க்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். இரண்டு மாவட்டச் செயலாளர்கள் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை. டி.டி.வி.தினகரன் முகாமிலுள்ள 9 எம்.எல்.ஏ-க்கள், தொலைபேசி மூலம் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்வதற்கு ஆதரவாக, 111 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்டுள்ளனர். 2 எம்.எல்.ஏக்களால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!