Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்குவை ஒழிக்க வாட்ஸ்அப் எண் : சேலம் கலெக்டர் அறிவிப்பு


சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராக ரோகிணி பதவியேற்றதிலிருந்து அதிரடியாகப் பல விஷயங்களைச் செய்துவருகிறார். சேலம் மாவட்டத்தில் தினந்தோறும் மூன்று, நான்கு குழந்தைகள், முதியவர்கள் டெங்கு காய்ச்சலால் பலியாகிறார்கள். டெங்கு ஒழிப்பு என்பது கலெக்டருக்குப் பெரும் சவாலாக இருந்துவருகிறது.

அந்தச் சவாலை எதிர்கொள்ள அரசு ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சீக்கிரத்தில் டெங்கு காய்ச்சலை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என உணர்ந்த கலெக்டர் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது பேசிய கலெக்டர் ரோகிணி, ''டெங்கு காய்ச்சல் சேலத்தில் அதிகரித்து இருக்கிறது. அதை அரசோடு இணைந்து பொதுமக்களும் சேர்ந்து டெங்கு கொசுக்களை ஒழித்தால் மட்டுமே விரைவில் கட்டுக்குள் கொண்டு வர இயலும். அதனால் டெங்கு கொசுக்களின் உற்பத்தியை அழிப்பதற்காகப் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒரு வாட்ஸ்அப் எண்ணை அறிவித்திருக்கிறோம். அந்த வாட்ஸ் அப் எண் 8098160003.

இந்த வாட்ஸ்அப் எண்ணைப் பொதுமக்கள் குறித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இருக்கும் ஏரியாவில் கொசுகள் உற்பத்தி ஆவதற்கான சுகாதாரச் சீர்கேடு, மழை நீர் தேங்கி இருந்தால், தேங்காய்த் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் எனத் தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் இருந்து ஒரு செல்ஃபி எடுத்து இந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினார். உடனே அந்தப் பகுதிக்கு சுகாதாரம் மற்றும் துப்புரவு ஊழியர்கள் விரைந்து வந்து சுகாதார சீர்கேட்டைத் தடுப்பதோடு, கொசுக்களின் உற்பத்தியையும் ஒழிக்க நடவடிக்கை எடுப்பார்கள். இப்படி எங்களுக்கு தகவல் கொடுக்கும் நபர்களை அழைத்து கெளரவப்படுத்தி அவர்களுக்குப் பரிசுகளும் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். உங்களிடமிருந்து நிறைய தகவல்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்களும் அரசாங்கமும் இணைந்து பணியாற்றினால்தான் இது போன்ற நோய்களை விரட்ட முடியும்.

இதுதவிர, இனி ஒவ்வொரு புதன்கிழமையும் சேலம் மாவட்டம் முழுவதும் மாபெரும் தூய்மைப் பணி நடைபெறும். இதற்கு 500-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி., டிராக்டர் வாகனங்களும், 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வோர் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளிலும் குளோரின் தெளிப்பான் மெஷின் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாளைக்கு முதல் முறையாக மாவட்டம் முழுவதும் மாபெரும் தூய்மைப் பணி நடைபெற இருக்கிறது. இதில் தன்னார்வலர்களும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறார்கள். இது தவிர மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்கள் கண்டறிந்து கைதுசெய்யப்படவும் இருக்கிறார்கள்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement