Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’எதிர்க்கட்சித் தலைவர் நீதிமன்றத்தை அணுகட்டும்’ - ஆளுநர் தரப்பு வாதம்

சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிடக் கோரிய வழக்கை அக்டோபர் 3-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், முதலமைச்சர் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறி, உடனடியாகச் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் வலியுறுத்தின. ஆனால், ’முதலமைச்சருக்கு எதிராக மனு அளித்த 19 எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க-வை விட்டு விலகவில்லை. இது அவர்களின் உட்கட்சி விவகாரம், எனவே, அதில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை’ என்று ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்தநிலையில், சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி பொதுநல மனுத்தாக்கல் செய்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அளித்த மனு அடிப்படையில் அந்தப் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ‘எதிர்க்கட்சித் தலைவர் மனு அளித்தது தொடர்பாகப் பொதுநல வழக்குத் தொடர மூன்றாவது நபருக்கு அதிகாரமில்லை. எதிர்க்கட்சித் தலைவரே நீதிமன்றத்தை அணுகலாம். இந்தநிலையில், மூன்றாவது நபர் சார்பில் பொதுநல வழக்குத் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது’ என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுப்பதாகக் கூறி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement