Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து! கமல்ஹாசன் வரவேற்பு

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளதை நடிகர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநியோகித்த மாணவி வளர்மதியைக் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 'நக்சல் அமைப்புக்கு வளர்மதி ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டைக் கூறிய காவல்துறையினர், அவரைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது.

மகள் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், "மாணவி வளர்மதி கைதுசெய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படவில்லை. தகவலை தெரிவிக்க காவல்துறையினர் தாமதப்படுத்தியுள்ளனர். எனவே, வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்துசெய்யப்படுகிறது" என்று தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதை நடிகர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement