வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (05/09/2017)

கடைசி தொடர்பு:18:10 (05/09/2017)

சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸை எதிர்த்து தி.மு.க வழக்கு!

ட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவைக்குள் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்ததால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட  21 தி.மு.க  உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.  இந்த நோட்டீஸ் தொடர்பாக சட்டசபைச் செயலாளரிடம் தி.மு.க உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும். ஆனால், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் அளிக்க மேலும் 15 நாள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உரிமைக்குழு நோட்டீஸை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ’தி.மு.க உறுப்பினர்களைத் தகுதி நீக்கம்செய்து அதன்மூலம் பெரும்பான்மையை நிலைநாட்ட தமிழக அரசு முயற்சிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.