கிண்டி தலப்பாகட்டி பிரியாணி கடையில் திடீர் தீ விபத்து!

கிண்டி, பாலாஜி மருத்துவமனை அருகே திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, கரும்புகை மண்டலமாக மாற, அந்தப் பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவிய தீயை, ஓட்டல் ஊழியர்களே ஒன்று திரண்டு அணைக்க முயற்சித்தனர். அதற்குள் தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள், உடனே சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். " சமையல் கூடத்தில் ஊழியர்களின் கவனக்குறைவால் தீ பரவிவிட்டது. கரும்புகை உருவானதால், பயந்து போய் வெளியே ஓடினர். சில ஊழியர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது" என்கின்றனர் ஓட்டல் ஊழியர்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!