Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் தேர்வுக்கு எதிராக ரயில் மறியல் - மாணவர் இந்தியா அமைப்பினர் 27 பேர் கைது

மிழகம் முழுவதும் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான இளைஞர்கள் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் திருப்பூர் இளைஞர்களும் தங்களை இணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில்  நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி, இன்று ரயில் மறியல் போராட்டத்தை நடத்த முயன்ற மாணவர் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

 மறைந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்துசெய்ய வலியுறுத்தியும், ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், திருப்பூரில் கடந்த சில நாள்களாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் போன்றவை நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாணவர் அமைப்பான 'மாணவர் இந்தியா" அமைப்பு சார்பில் இன்று திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முற்பட்டனர். திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இன்று கூடிய மாணவர் இந்தியா அமைப்பினர் ஊர்வலமாக அணிதிரண்டு கோஷமிட்டுக்கொண்டே திருப்பூர் ரயில்நிலைய வளாகத்துக்குள் நுழைய முயற்சிசெய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த 27 பேரை கைதுசெய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement