Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.டி.ஓ. அலுவலக காலாவதி இணையம்...  ஒரிஜினல் லைசென்ஸ் நாளை முதல் கட்டாயம்! 


   லைசென்ஸ் வழங்கும் ஆர்.டி.ஓ. அலுவலகம்

நாளை முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸைக் கையில் வைத்திருப்பது கட்டாயம் என்ற கோர்ட்டின் அறிவிப்பால் பொதுமக்கள், அருகாமையில் உள்ள  ஆர்.டி.ஓ. அலுவலகம் நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.  அங்கேயோ அலுவலகக் கணினிகள் முடங்கி, மக்களை வாட்டத் தொடங்கி இருக்கிறது. சென்னை ஆர்.டி.ஓ. குறியீட்டின் கீழ் அதிகமான மக்கள் தொகையைக்   கொண்டுள்ள பகுதியாக 01- என்ற ஆர்.டி.ஓ. (அயனாவரம்) அலுவலகம்  வருகிறது. சென்னை 23, 8, 31 மற்றும் 2 ஆகிய பின்கோடுகளைக் கொண்ட வாகனங்களுக்கு உரிய பணிகள் இங்கே நடந்து வந்தன. ஓட்டுநர் உரிமப் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவைகள் இந்த ஆர்.டி. ஓ. அலுவலகத்தின் முக்கியப் பணிகள். பாதி ஆன் -லைனிலும், மீதியைக் கையால் எழுதியும் ஒருவழியாக ஒப்பேற்றிதான் இங்கே மக்களுக்கு லைசென்ஸை வழங்கி வந்தார்கள்.  ஆக, இதுவரையில் பாதியளவே செயல்பட்டுவந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் ஆன் -லைன் செயல்பாடு, இப்போது அதுவும் இல்லாமல் முடங்கியதால், மக்களின் எந்த வேலையும் நடக்கவில்லை.  மோட்டார் சைக்கிள், ஆட்டோக்கள் மட்டுமல்ல... லாரி  ஓட்டுநர்களுக்கும் இதே பரிதாப நிலைதான்.

இப்படிப் பல ஆர்.டி. ஓ. அலுவலகங்கள், குறைவான இணைய வேகத்தால் ராட்டினம்போல் சுற்றியபடி இருந்தது. மோட்டார் வாகனத்துடன் நாளை  வெளியில் போகவிருக்கும் பொதுமக்கள், இந்தக் கால தாமதத்தால் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் நினைத்தது போலவே மாலை ஆறுமணி வரை இதே நிலை நீடித்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து  சோகத்துடன் வெளியேறினர். "பொதுப்பணி வில்லை (பேட்ஜ்) பெறுவது தொடங்கி எந்தப் பணியும் நடக்காமல் போனதற்கு இன்டர்நெட் வேகம் இல்லாததே காரணம். சட்-டவுன்,  திடீர் சர்வர் லாக் இங்கு சாதாரணமாக உள்ளதுதான்.  ஆனால், நாளை ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் என்ற நிலையால் இங்குவந்து காத்திருந்த பொதுமக்கள் எங்களைத் திட்டியபடி சென்றனர். தரமான இணைய இணைப்பு இங்கு வைக்கப்படாததே இத்தனை குளறுபடிக்கும் காரணம்." என்கின்றனர் அங்கே பணியாற்றும் ஊழியர்கள். வாகன சோதனையின்போது இந்தக் காரணத்தைச் சொன்னால் போலீஸ்காரர் விட்டு விடவாப் போகிறார்?  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement