Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நாங்களும் செய்வோம் ரத்ததானம்’ - நெல்லையில் கலக்கிய மாற்றுத் திறனாளிகள்!

நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று குருதிக் கொடையளித்தனர். 

மாற்றுத் திறனாளிகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக வரும் 17-ம் தேதி விருதுநகரில் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்த இந்தச் சங்கத்தின் மாநாடு குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

பிறரால் பரிதாபமாகப் பார்க்கப்படும் நிலையை மாற்றி, தங்களாலும் பிறருக்கு உதவிக்கரமாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த ரத்ததான முகாம் நடந்தது. பாளையங்கோட்டை சரோஜ் நினைவகத்தில், சங்கத்தின் நெல்லை மாவட்டத் தலைவர் தியாகராஜன் தலைமையில் இந்த முகாம் நடந்தது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ராமகுரு முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சித்தி அத்திய முனவரா முகாமைத் தொடங்கி வைத்தார். 

மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். அத்துடன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் ரத்ததானம் செய்தனர். உடலில் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் தெம்பும் மனதில் கருணையும் கொண்டு பிறருக்கு உதவும் வகையில் குருதிக்கொடை அளித்ததை அனைவரும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement