இயற்கைப் பாதுகாவலர் விருது: தனிநபர், அமைப்புகள் விண்ணப்பிக்க அழைப்பு! | eminent persons in nellai and tuticorin districts can apply for social activist award

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/09/2017)

கடைசி தொடர்பு:23:00 (05/09/2017)

இயற்கைப் பாதுகாவலர் விருது: தனிநபர், அமைப்புகள் விண்ணப்பிக்க அழைப்பு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர் மேலாண்மை உள்ளிட்ட சமூகப் பணியில் ஈடுபட்ட தனிநபர்கள், சமூக அமைப்புகளுக்கு இயற்கைப் பாதுகாவலர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி

அசோகா சுற்றுச் சூழலியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஏ ட்ரீ) மற்றும் இந்திராணி செல்லத்துரை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, ஆண்டுதோறும் ‘பெல் பின்ஸ் - ஏ ட்ரீ இயற்கை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருது சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிவாணனுக்கு வழங்கப்பட்டது. தாமிரபரணி கலைக்குழு மூலமாக அவர் தன் மாவட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. 

விருது பெற பரிந்துரை - தாமிரபரணி

நடப்பு ஆண்டுக்கான விருது வரும் அக்டோபர் 4-ம் தேதி வழங்கப்பட உள்ளது. நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோவையில் உள்ள ஓசை அறக்கட்டளையைச் சேர்ந்த காளிதாசன் கலந்துகொண்டு இந்த விருதை வழங்குவதுடன் சுற்றுச் சூழல் பாதுகாப்புகுறித்து சிறப்புரை நிகழ்த்த உள்ளார். ‘பெல் பின்ஸ் - ஏ ட்ரீ இயற்கைப் பாதுகாவலர் விருது’ வெல்பவருக்கு அந்த விழாவில் காசோலை மற்றும் சான்று வழங்கப்பட உள்ளது. 

தாமிரபரணி பாய்ந்தோடும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி, குப்பைகள் மறு சுழற்சி, நீர் மேலாண்மை, பல்லுயிரினங்கள் பாதுகாப்பு போன்ற துறைகளில் திறம்பட செயல்படும் தனி நபர்கள் அல்லது அமைப்புகளை இவ்விருதுக்குப் பரிந்துரை செய்யலாம். பரிந்துரை செய்யப்படும் விண்ணப்பங்களை ஐந்து நபர்கள் அடங்கிய குழு பரிசீலித்து விருது பெறுபவரைத் தேர்வு செய்வார்கள். 

மாசுபடும் ஆறு

2017-ம் ஆண்டுக்கான ‘பெல் பின்ஸ் - ஏட்ரி இயற்கைப் பாதுகாவலர் விருது’ பரிந்துரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரை விண்ணப்பத்தை  http://www.atree.org/atree_bellpins_cla_2017 என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஏ ட்ரீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மு.மதிவாணனை ’ஒருங்கிணைப்பாளர், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு’ என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம். அத்துடன் 9488063750 என்ற எண்ணிலோ accc@atree.org என்ற மின்னஞ்சலிலோ தொடர்புகொண்டு வரும் 15-ம் தேதிக்குள் பரிந்துரை செய்யலாம் என ஏ ட்ரீ அமைப்பின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.