Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நதிகள் இணைப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மனிதச் சங்கிலி!

மனிதச் சங்கிலி

நதிகள் இணைப்பை வலியுறுத்தியும் நதிகளை சுத்தமாக பராமரிக்கக் கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்பு உணர்வு மனிதச் சங்கிலி நடத்தினார்கள். 

நெல்லையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர் தினமான இன்று நதிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்பு உணர்வு மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையான கொக்கிரகுளம் பகுதியில் கரங்களைக் கோத்தபடி அணி வகுத்து நின்ற மாணவர்கள் விழிப்பு உணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர். அத்துடன் விழிப்பு உணர்வு கோஷங்களையும் எழுப்பினார்கள். 

நதியின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், ’இன்று நதிகளை மீட்க மதி இல்லையெனில் நாளை அவன் வாழ்வை மீட்க நதி இருக்காது’ ’நதி தான் ஒரு தேசத்தில் எல்லைக் கோடு’, 'வீட்டின் கழிவறையில் வாழ்க்கை நடத்த முடியுமா? நதிகளை கழிவுகளாக்கி மனிதா.. நாட்டையே கழிவுகளாக ஆக்கி விட்டாயே..!’ என்பது போன்ற விழிப்பு உணர்வு அட்டைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் கரம் கோத்து  நின்றதைச் சாலைகளில் சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

மாணவர்கள்

இதுபற்றி மாணவர்கள் கூறுகையில், ’நீர் ஆதாரத்தின் முக்கியத்துவம் பொதுமக்களுக்கு இல்லாத காரணத்தினாலேயே தாமிரபரணி நதியை குப்பைத் தொட்டியாக மாற்றி விட்டார்கள். கழிவுகள் அனைத்தும் தாமிரபரணியில் கலக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு குடிநீரையும் விவசாயிகளுக்கு பயிர் செய்யவும் தண்ணீர் வழங்கும் தாமிரபரணியை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த விழிப்பு உணர்வை நடத்தினோம். 

அத்துடன், நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். சுற்றுச் சூழல்சீர்கேடுகளை கலைய வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். நமக்கு பயன்படும் நதிக்கு நாம் எதையாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தின் காரணமாகவே இதில் பங்கேற்றோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது’ என்றார்கள், உற்சாகத்துடன்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement