Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல்... உறுதியளித்த அதிகாரிகள்!

திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியை அடுத்துள்ள கீதா நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதோடு, ஆழ்குழாய் கிணற்று நீரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இருக்கிறது. இருப்பினும் ஆழ்குழாய் கிணற்றில் நீர் உறிஞ்சும் மோட்டார் கடந்த இரண்டு வாரங்களாக பழுதடைந்த நிலையில் இருப்பதால் அப்பகுதி முழுவதும் தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியிருக்கிறது. இதனால் பாதிப்படைந்த அப்பகுதி குடும்பத்துப் பெண்கள் இன்று இரவு திடீரென காலிக்குடங்களுடன் சிறுபூலுவப்பட்டி என்ற இடத்தின் ரிங்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபடத் துவங்கினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படையத் துவங்கியது. பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி மண்டல செயற்பொறியாளர் என அரசு தரப்பினர் அப்பகுதிக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அப்பகுதி ஆழ்குழாய் கிணற்றில் பழுதடைந்திருக்கும் மின் மோட்டாரை 3 தினங்களில் சீரமைத்துத் தருகிறோம் என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement