Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த மழை!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காலநிலை நிலவுவதால் குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், கடந்த காலங்களில் பருவமழையைத் தொடர்ந்து பெற்றுவந்தது. இதனால், மாவட்டத்தில் விவசாயமும் செழித்தது. கடந்த ஆண்டு முதல் பருவமழை குமரியில் சரியாகப் பெய்யவில்லை. மக்களும் விவசாயிகளும் நீர் இல்லாமல் தவித்துவந்தனர். மழை பெய்யாததால், குமரியின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகியவைகளின் நீர்மட்டம் குறைந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவிவந்தது. தமிழகத்தில், தென்மேற்குப் பருவமழை காரணமாக எல்லையோர மாவட்டங்களில் பரவலாகப் பல இடங்களில் மழைபெய்துவருகிறது. ஆனால், கடந்த சில நாள்களாக  குமரியில் மழை பெய்யாமல் வெயில் வறுத்தெடுத்துவந்தது.

இந்நிலையில், நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல வெயில் இருந்தது. மாலை, திடீரென வானம் கருமேகக்கூட்டங்களுடன் காணப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், சாலை எது பள்ளம் எது எனத் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதற்கிடையே, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை ஓரிரு நாளில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தத் திடீர் மழையால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement