Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கௌரி லங்கேஷை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்' - வன்னியரசு கோரிக்கை!

பெங்களூரு மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  தீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்துவந்தார். 'லங்கேஷ் பத்திரிகே' என்ற கன்னடப் பத்திரிகையை நடத்திவந்த கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவந்தவர். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கௌரி லங்கேஷ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தந்தை லங்கேஷ் அவர்களைப் போலவே சிறந்த முற்போக்காளராக, பெண்ணியவாதியாகச் செயல் பட்டுவந்த ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ்,  பெங்களூரில் பல முறை இந்துத்துவ வெறியர்களால் மிரட்டலுக்குள்ளானார். அஞ்சாமல் தொடர்ந்து தலித்துகளுக்கு ஆதரவாகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகப் பேசியும் எழுதியும் வந்துள்ளார். கடவுள் மறுப்புக் கொள்கையோடு, பெண்ணிய விடுதலைக்காக களமாடிய தோழர்  கெளரி அவர்களைப் பல முறை கொல்ல முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். இப்போதுதான் இந்துத்துவவாதிகள் தங்கள் கொலை வெறியைத் தணித்துள்ளனர். கொலைகாரக் கும்பலின் அச்சுறுத்தலுக்கு இந்திய ஜனநாயகம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. அமைதியைச் சீர்குலைத்துவரும் இந்துத்துவக் கும்பலை கர்நாடக அரசு குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். இந்துத்துவ கொலைகாரக்கும்பலை  விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறோம்' என்று தெரிவித்திருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement