ஜாக்டோ - ஜியோ போராட்டம்: ஆசிரியர்களுக்கு அழைப்பு!   

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டுவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும், மாநில அரசின் 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கு முன்னதாக இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு இன்றைக்குள் அரசிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை என்றால் செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, குமரி மாவட்டப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

8-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, பழைய ஓய்வூதிய முறையையே தொடர வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும், மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு 1.1.16 முதல் வழங்கும் வகையில் உடனடியாக மாநில அரசின் 8-வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். மாநில அரசின் 8-வது ஊதியக் குழுவின் அமல்படுத்துவதற்கு முன்னதாக, இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் வழங்க வேண்டும். 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தைத் தொடர்வதற்கான பரிந்துரை வழங்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பரிந்துரையில் சேர்த்து, விரைவில் முதல்வரிடம் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில்கள் இன்றைக்குள் கிடைக்காவிட்டால், திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். முன்னதாக, வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பள்ளிகளுக்கு நேரில் சென்று குமரி மாவட்ட ஆசிரியர்களுக்கு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!