Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் முறைக்கு எதிர்ப்பு..! மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சிஎம்சி!

நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி)  மருத்துவ மாணவர்கள் சேர்க்கையைத் தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 


நீட் தேர்வு முறையிலேயே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படவேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியநிலையில், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றமும் 'நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வும் நடைபெற்றுவருகிறது. அதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, நீட் தேர்வு முறையில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், 99 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்கள் மற்றும் 61 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், 'நீட் தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை என்பது அரசியலமைப்புச் சட்டம் 30(1) -வது விதி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்கில், விரைவில் தீர்ப்பு வரும்' என்று தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement