Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த 6 விதி மீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம்!

'மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும்' என்று சென்னை நகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். 


வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைத் தண்டனை என்று போக்குவரத்துக் காவல்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவு, வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்குவருகிறது. இதுகுறித்த குழப்பங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சென்னை நகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் பெரியய்யா செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அவர், 'தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களிடமும், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களிடமும் அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படாது. அவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் மட்டும் விதிக்கப்படும். ஆறுவிதமான குற்றச்செயல்களில் ஈடுபவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும்' என்று தெரிவித்தார். 


அசல் உரிமம் கேட்கப்படும் ஆறு குற்றங்கள் :


1.அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல்
2.அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல்
3.குடி போதையில் வாகனம் ஓட்டுதல்
4.சிக்னலில் எல்லையைத் தாண்டுதல்
5.செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல்
6.சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல்

முன்னதாக, வாகன ஓட்டிகள் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற காவல்துறையின் உத்தரவுக்கு எதிராக, டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். இதுதொடர்பான மற்றொரு வழக்கில், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது வாகனப் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 139-ன்படி ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இல்லை' என்று நீதிபதி துரைசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வுக்கு மாற்றப்பட்டது. மறுபடியும் அந்த வழக்கை விசாரித்த இந்திரா பானர்ஜி, அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்று உத்தரவிட்டார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close