Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரன், நடிகர் செந்தில் மீது வழக்குப்பதிவு!

டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கிறார், நடிகர் செந்தில். திருச்சி எம்.பி குமார், எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சி எம்.பி குமாரும் டி.டி.வி. தினகரனும் எதிரெதிர் அணியில் இருக்கிறார்கள். இந்நிலையில், சென்னையில் உள்ள தினகரன் வீட்டு வாசலில் மீடியாக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில், திருச்சி எம்.பி குமாரைப் பற்றி அவதூறான வார்த்தைகளில் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செந்தில் பேசிய வீடியோ விவரங்களைக் குமார் தரப்பினர் சேகரித்துள்ளனர். 

 

senthil

இதையடுத்து குமார், சென்னை போலீஸில் புகார் அளித்துள்ளார். நடிகர் செந்தில், டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில் தன்னைத் தகாத வார்த்தைகளில் அவதூறாகப் பேசியதாக, திருச்சி எம்.பி., குமார் புகார் தெரிவித்ததன் பேரில், செந்தில் மற்றும் தினகரன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதேபோல, சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த புதுக்கோட்டை முன்னாள் எம்.பி., ஒருவரின் மகன் தற்போது தினகரன் அணியில் இருக்கிறார். திருச்சி எம்.பி., குமாரை விமர்சித்து அந்த முன்னாள் எம்.பி-யின் மகன்  சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியதாகக்கூறி, அவர்மீதும் புகார் கொடுத்திருக்கிறார் குமார். இதன் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close