Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நீட்' போராட்டத்துக்கு எதிரான வழக்கை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

அனிதாவின் மரணத்தையடுத்து, தமிழகத்தில் நடந்துவரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக  விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வால், தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவ, மாணவிகள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாதநிலை ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரது மருத்துவக் கனவு தகர்ந்துபோனது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அனிதா, கடந்த 1-ம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ’தமிழக அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு நிகராக மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவசர வழக்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க என்ன தேவையிருக்கிறது என்று கேள்வி எழுப்பியதோடு, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement