அனிதா தற்கொலை: பதில் சொல்லுமா மத்திய, மாநிலஅரசு...? #JaiKiBaat

1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போன 17வயது அரியலூர் மாணவி அனிதா தற்கொலை. இதற்கு காரணம் யார்?  அனிதாவுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியது யார்? தமிழ் நாட்டில் மருத்துவம் படிக்க தகுதியிருந்தும் நீட் என்ற வார்த்தையால் மருத்துவ தகுதியிழந்து உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் தற்கொலைக்கு யார் பொறுப்பு? இந்த கேள்விகளை தான் பதிவு செய்திருக்கிறார் ஜெயச்சந்திரன்.

விகடன் டிவியின் ஜெய் கி பாத் நிகழ்ச்சியில் வாரம் ஒரு டாபிக்கை தனக்கே உரிய ஸ்டைலில் பதிவு செய்வார் ஜெயச்சந்திரன். எல்லாம் முடிந்த பிறகு குரல் தரும் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இந்த பிரச்னை ஆரம்பித்த இடத்தில் குரல் கொடுத்திருந்தால் அனிதா காப்பாற்றப்பட்டிருக்கலாம்... மத்திய அரசு, மாநில அரசு இந்த தற்கொலைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். தங்களுக்குள் எம்.எல்.ஏ பங்கு பிரிப்பில் பிஸியாக இருந்து அனிதாவை கொன்று விட்டார்கள்...

'அனிதாவை கொன்ற அரசியல்' வீடியோ

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!