Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென் மாவட்டங்களைக் குறிவைக்கும் எடப்பாடி- தினகரன்... நாளை ஒரே சமயத்தில் வருவதால் பரபரப்பு!

தென் மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகளைத் தங்கள் பக்கமாகக் கவர்ந்திழுக்க தினகரன், எடப்பாடி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமியும் டி.டி.வி.தினகரனும் ஒரே சமயத்தில் வருகை தருவதால், பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தினகரன்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தினகரன் அணியினர் வலுவான நிலையில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பெரும்பாலானோர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தபோதிலும், கட்சி நிர்வாகிகள் டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவான நிலையிலேயே இருக்கிறார்கள். குறிப்பாக, நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட எம்.எல்.ஏ-க்கள், அரசுக்கு ஆதரவான நிலையில் இருந்தபோதிலும், கட்சியின் அனைத்து அணியினரும் தினகரன் பக்கமே இருக்கிறார்கள்.

தூத்துக்குடியிலும் தினகரனுக்கு எதிரான நிலையில் இருந்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை, தினகரன் அதிரடியாக மாற்றியுள்ளார். குமரி மாவட்டத்தில், தளவாய் சுந்தரம் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக தினகரனுக்குப் பக்க பலமாக இருக்கின்றனர். தென் மாவட்டத்தில், கட்சி நிர்வாகிகள் தினகரன் அணியில் இருப்பதால், அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ் ஏற்கெனவே முயற்சி மேற்கொண்டார். 

ஓ.பி.எஸ்

கடந்த வாரம், நெல்லை மாவட்டம் நெற்கட்டுசெவல் கிராமத்தில் நடந்த பூலித்தேவன் பிறந்தநாள் அரசு விழாவில் பங்கேற்ற ஓ.பி.எஸ்., கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், நெல்லை மாவட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் எடப்பாடி அணியினரும் இன்னும் இணைந்து செயல்படாமல் தனித்தனி அணிகளாகவே இருக்கிறார்கள். இதனால் ஓ.பி.எஸ் வருகையின்போது எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

எடப்பாடி பழனிச்சாமிஇந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு நாளை வருகிறார். அங்கு கட்சி நிகழ்ச்சி மற்றும் கல்லூரி விழாக்களில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், டி.டி.வி.தினகரனும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தின் ஒன்றியச் செயலாளர் முருகன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வருகை தரவுள்ளார். அவரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். தென் மாவட்டங்களைக் கைப்பற்ற எடப்பாடி, தினகரன் அணியினர் ஆர்வம் காட்டிவரும் விவகாரம், கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையில் முதல்வரை வரவேற்க தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க-வினர் ஏற்பாடு செய்துள்ளனர். செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலீஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close