Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெரினாவை அதிரவைத்த மாணவர்கள்..! ஜெ. நினைவிடத்திலும் போராட்டம்

அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வலியுறுத்தியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

students in marina


நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா, செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலை, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாகத் தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருக்கும் இடத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அமர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிவருகின்றனர். காவல்துறையினர் அவர்களைச் சமாதானம்செய்ய முயன்ற காவல்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், லயோலா மற்றும் புதுக் கல்லூரியிலும் மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராடிவருகின்றனர். அதேபோல, தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடிவருகின்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close