Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவையில் நிறைவுபெற்றது ரேஸ் திருவிழா..!

கோவையில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வேயில் செப்டம்பர் 2, 3 தேதிகளில், 20 வது ஜே.கே டயர் FMSCI நேஷனல் ரேஸிங் சாம்பியன்ஷிப்  நடைபெற்றது. இந்த சம்பியன்ஷிப்பின் மெயின் ஈவென்ட்டான `யூரோ ஜே.கே 17'- ல் ஹைதராபாத்தைச் சேர்ந்த அணிந்தித் ரெட்டி என்ற வீரர் இரண்டு நாள் நடைபெற்ற அனைத்து ரேஸிலும், தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் இறக்கினார். பெனால்டி விதித்தபோதும் மூன்றாவது சுற்றின் முடிவில் 96 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

`ரோடு டு ரூக்கிஸ் கப்' என்னும் 12 - 16 வயது சிறுவர்களுக்கான ஜிக்ஸர் ஒன் மேக் பந்தயத்தில், மிசோரமைச் சேர்ந்த லல்ஹருஷலா முதல் நாளே 10 புள்ளிகள் எடுத்து ஸ்பெயினில் நடக்கவிருக்கும் ரோடு டு மோட்டோ ஜி பி-யில் பங்கேற்க தகுதி பெற்றார்.

ரேஸ்

ஜிக்ஸர் ப்ரோ கப்பில், சென்னையைச் சேர்ந்த ஜோசப் மேத்தியூ மூன்றாம் இடம் பிடித்தபோதிலும், 17 புள்ளிகள் முன்னிலை வகித்து, மொத்தம் 56 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

இறுதியாக, `LGB ஃபார்முலா 4' ரேஸும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. டார்க் டான் ரேஸிங் அணியைச் சேர்ந்த டில்ஜித், இரண்டாம் நாள் நடைபெற்ற இரண்டு ரேஸ்களிலும் முதல் இடம் பிடித்தார். இருப்பினும், சாம்பியன்ஷிப் பட்டியலில் 29 புள்ளிகளுடன் பின்தங்கியே உள்ளார். 61 புள்ளிகளுடன் சீதேஷ் மண்டோடி முதல் இடத்திலும், சென்னையைச் சேர்ந்த நட்சத்திர வீரர் விஷ்ணு பிரசாத்
53 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close