Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தக் கோரி வழக்கு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விரைவில் நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


ஜெயலலிதா மரணத்தால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க சார்பில் மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாகக் களத்தில் இருந்தனர். இந்நிலையில், தேர்தலுக்காக மக்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய ஆவணங்களும் சிக்கின. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி காலியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், இடைத்தேர்தலை விரைவில் நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, சட்டமன்றத் தொகுதி காலியாகும்போது 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்துக்குத் தைரியமில்லை. எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close