நீட் தேர்வுக்கு நான் காரணமா? அதிர்ந்த அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் மறுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்தால் நீட் தேர்வால் மருத்துவராகும் கனவைத் தொலைத்த மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்த அனிதா நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்டது மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நீட் தேர்வு தமிழகத்துக்கு வரக்காரணம் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா.பாண்டியராஜன்தான் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாஃபா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் கையெழுத்திட்டதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானது. தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழகத்தில் நீட் தேர்வைக் கொண்டுவரக்கூடிய எந்த ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திடவில்லை. நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கொண்டுவர மட்டுமே நான் முயற்சி செய்தேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!