ஆசிரியர் தினத்தில் மரக்கன்றுகள் நட்டு அசத்திய உசிலம்பட்டி ஆசிரியர்கள்

ஆசிரியர் தினத்தை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள். அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், பரிசுகளையும் வழங்கினார்கள். 

உசிலம்பட்டி

இந்நிலையில்,மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், வித்தியாசமான முறையில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடினார்கள். தமிழகத்திலேயை முன்மாதிரியாக  2,000 மரக்கன்றுகள் நட்டு, அவர்கள் கொண்டாடினார்கள்.

இந்தப் பகுதி மிகவும் வறட்சியானது. விவசாயம் பொய்த்து, மக்கள் பலரும் பிழைப்புக்காக வெளியூர்களுக்குச் செல்கின்றனர். மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் தமது அசிரியர் தினத்தை மரக்கன்றுகள்  நட்டு புது இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்கள். உசிலம்பட்டி வட்டாரத்தில்,  வரும் காலங்களில் மழைவளம் பெறுக ஆசிரியர்கள் முயற்சி எடுத்து, இன்றைய ஆசிரியர் தினத்தில் உசிலம்பட்டி பகுதி முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்புசெய்வோம் என உறுதியேற்று, பொது மக்களோடு இணைந்து இன்று 2,000 மரக்கன்றுகளை நட்டனர். இதைப்போல ஒவ்வொரு பகுதி ஆசிரியர்களும் முயற்சி எடுத்தால், தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!