Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தத் திருமணத்துக்கு இவர்கள்தான் சிறப்பு விருந்தினர்கள்!

ழக்கமாக திருமண விழாக்களுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சாமியார்கள், சாதிச் சங்கத் தலைவர்கள், நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள். பெரும் பொருள்செலவில் திருமணம் நடத்துவார்கள். 'ஆடாத மரமே வருக' 'அசையாத குளமே ஆசி தருக' என்றெல்லாம் ப்ளக்ஸ் பேனர் வைத்து அலப்பறையில் ஈடுபடுவார்கள்.  ஆடம்பரமாகத் திருமணம் நடத்துவதைப் பெருமையாகக் கொள்ளும் சமூகத்தில், ஆதரவற்ற சிறுவர் - சிறுமியர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற திருமணம் என்றால் திரும்பிப் பார்க்கத்தானே வைக்கும். 

சிறார்கள் இந்த திருமணத்துக்கு சிறப்பு அழைப்பாளர்கள்

கோவை ,கருமத்தம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சாதனாவுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 2ம் தேதி நடந்த திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாமல் 135 ஆதரவற்ற சிறுவர் -சிறுமியர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அரவிந்த்- சாதனா திருமணம் சோமனூரை அடுத்த நல்லா கவுண்டம்பாளையத்தில் உள்ள பிரபஞ்ச சேவா அமைதி மையத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு சிறுவர் -சிறுமியர் தனிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். மணவிழாவில் அவர்களுக்குத்தான் முதல் மரியாதை வழங்கப்பட்டது. மணமேடை ஏறிய சிறார்கள் புது மணத் தம்பதியரை ஒரு சேர வாழ்த்தினர். பின்னர், சிறார்களுக்குச் சுவைமிக்க விருந்து வழங்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் அவர்கள் பத்திரமாக ஆதரவற்றோர் மையத்துக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மணமகனின் தந்தை சுப்ரமணியம் '' பெரும்பாலும் ஆதரவற்றோர் இல்லத்தில்தான் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். நேரம் கிடைக்கும் போது, ஆதரவற்றோர் இல்லத்திற்கு செல்வேன். இப்போது, என் மகனின் திருமணத்தையும் அவர்கள் முன்னிலையில் நடத்தினேன் '' என்கிறார். 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement