வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (07/09/2017)

கடைசி தொடர்பு:15:50 (07/09/2017)

நிதிப்பற்றாக்குறையில் சென்னை மாநகராட்சி... சரண்டர் லீவுக்கு சம்பளம் இல்லையாம்!

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்த 'சரண்டர் லீவ்'  அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. 
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்களில் தொடங்கி பெரிய பதவிகளை வகிப்போரும் இந்த 'சரண்டர்லீவ்' பணம் கைக்கு வராமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

நம்மிடம் பேசிய மாநகராட்சி ஊழியர்கள், "சரண்டர் லீவுக்கான தொகையைக் கொடுக்க மாநகராட்சி கைவசம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என்று எங்களிடம் சொல்லி விட்டது. விடுமுறை நாட்களிலும் பணியாற்றி, அந்த பணிக்கான நாள் கணக்கை நாங்கள் 'சரண்டர் லீவ்' என்று ஒப்படைப்போம், பணமும் 15 நாட்களில் கைக்கு வந்து விடும். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை அதற்கான சம்பளத்தொகை கைக்கு வராமல் மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறது 

பிள்ளைகளின் கல்விக் கட்டணம்,  பண்டிகை கொண்டாட்டம் போன்ற சந்தர்ப்பங்களில் இந்த 'லீவ்' சம்பளம் கையில் இருந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும். விநாயகர் சதுர்த்தியும், பக்ரீத் பண்டிகையும் வந்து போய்விட்டது. அடுத்து ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என்றெல்லாம் வரிசையாகப் பண்டிகைகள் வருகிறது. நாங்கள் ஒப்படைத்த சரண்டர் லீவுக்கான சம்பளம்தான் வரவில்லை. எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்காத பணம், அதன்பின்னால் கைக்கு வந்து என்ன லாபம் ?" என்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்